செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

வரதட்சணை புகார்: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தேனி மாவட்டம், மேலக்கூடலூரில் பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது

Updated On :13 பிப்ரவரி 2019, 8:16 am IST

தேனி மாவட்டம், மேலக்கூடலூரில் பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேர் மீது உத்தமபாளையம் மகளிர் போலீஸார் செவ்வாய்க்கிழமை  வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 மேலக்கூடலூர் கழுவன் சொக்கத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா (29). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
 இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன், திவ்யாவின் தாய் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று இருப்பதாகவும், அந்தப் பணத்தை வாங்கி வரும்படியும் கூறி திவ்யாவின் கணவர் கார்த்திகேயன், மாமியார் ஜெயா மற்றும் மாமனார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக உத்தமபாளையம் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார்.  
 அதன்பேரில், கார்த்திகேயன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.