தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரி மாணவிகள், பெங்களூருவில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்றதை அடுத்து, அவர்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கர்நாடக மாநிலம், ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகா சமஸ்தான மடத்தின் சார்பில், ஸ்ரீ நிர்மலாநந்தா சுவாமியின் 6ஆம் ஆண்டு முடிசூட்டு விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில், மருத்துவம், பொறியியல், கல்வியியல், கலை அறிவியல் என 200 கல்லூரிகள் கலந்துகொண்டன.
இதில், தார்மீக மற்றும் நெறிமுறைகள் என்ற தலைப்பில், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரி முதல் பரிசை பெற்றது. மேலும், நடனம், விநாடி-வினா உள்ளிட்ட போட்டிகளிலும் பங்கேற்று இக்கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்றனர். இவர்களுக்கு, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நிர்மலாநந்தா சுவாமி வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலர் என். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், இணைச் செயலர்
ரா. வசந்தன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜி. ரேணுகா, ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன், துணை முதல்வர் வி. வாணி, பேராசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









