தேனி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் பேட்டரிக் ரேமண்ட், அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஞானதம்பி, மாவட்டத் தலைவர் திருப்பதி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் கிருஷ்ணசாமி, அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநிலச் செயலர் முருகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தில் போராட்டத்தையொட்டி அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு செல்லவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அரசுப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்ததால், வகுப்புகள் முறையாக நடைபெறவில்லை. அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் சமையலர் மட்டுமே பணியில் இருந்தனர்.
கம்பத்தில்: கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகத்தில் வழக்கமான பணிகள் நடைபெறவில்லை.
அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்தடன் திரும்பினர். அதேபோல் கம்பம் ஒன்றியத்தில் உள்ள குள்ளப்பகவுண்டன் பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, மஞ்சள்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


