ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

வருசநாடு அருகே மக்கள் தொடர்பு முகாம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஊராட்சிக்குள்பட்ட முருக்கோடை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :24 ஜனவரி 2019, 1:04 am IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஊராட்சிக்குள்பட்ட முருக்கோடை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
 இதில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார். முகாமில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் 35 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, ரூ. 3 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் 31 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, தோட்டக்கலைதுறை மற்றும் வேளாண்மைதுறை சார்பில சார்பில் ரூ. 43 ஆயிரம் மதிப்பில் 5 பேருக்கு மருந்து தெளிக்கும் கருவி, மரக்கன்று உள்ளிட்டவை மற்றும் 8 பேருக்கு குடும்ப அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான உறுப்பினர் அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். முருக்கோடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கவும், முருக்கோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடை பயிற்சி பாதை அமைக்கவும், வருசநாடு முதல் வாலிப்பாறை வரை புதிய தார்ச்சாலை அமைக்கவும் கிராம மக்கள் சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 
இந்த முகாமை தொடர்ந்து முருக்கோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை ஆட்சியர் வழங்கினார். ஆட்சியருடன் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.