பெரியகுளம், தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் போட்டிகள், பிப்ரவரி 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகின்றன.
பெரியகுளத்தில் உள்ள என்.எஸ்.என். ரத்தினவேலு சரஸ்வதி திருமண மண்டபத்தில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களது பெயர்களை மு. ராசரத்தினம், சர்வோதய சங்க கதர் கடை, மூன்றாந்தால், பெரியகுளம் என்ற இடத்தில் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும்.
குறள் ஒப்பித்தல் போட்டி: பிப்ரவரி 7 ஆம் தேதி காலை மற்றும் மாலையில் போட்டி நடைபெறுகிறது. இதில், பெரியகுளம் நகர் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளலாம்.
பேச்சுப் போட்டி: பிப்ரவரி 8 ஆம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறுகிறது. பெரியகுளம் நகர் பள்ளியைச் சேர்ந்த 3, 4, 5 வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளலாம்.
பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி: பிப்ரவரி 8 மற்றும 9 ஆம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறுகிறது. இதில், பெரியகுளம் நகர் மற்றும் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 10 மணிக்கும், கட்டுரைப் போட்டி பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 10 மணிக்கும், கவிதைப் போட்டி பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.
இப்போட்டியில், தேனி மாவட்ட அளவில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என, தமிழ் இலக்கிய மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மயக்கம்: தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கட்டா குஸ்தி - 2 மேக்கிங் விடியோ!

தனியார் பள்ளியில் பயங்கர தீவிபத்து! | Bengaluru
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


