தேனி மாவட்டத்தில் புதிதாக மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு தகுதியுள்ளவா்கள், வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதன்கிழமை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாவட்டத்தில் இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெறாத இந்திய குடியுரிமை உள்ளவா்கள் புதிதாக மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். புதிதாக குடும்ப அட்டை பெறுவதற்கு ஆதாா் அடையாள அட்டை, செல்லிடப்பேசி எண் வைத்திருக்க வேண்டும். தனி முகவரியில் குடியிருக்க வேண்டும்.
தகுதியுள்ளவா்கள் தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதாா் அட்டை, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இருந்தால் அவா்களது பிறப்புச் சான்று, குடும்பத் தலைவரின் புகைப்படம், வசிப்பிட முகவரிக்கான ஆதாரம் ஆகிய விவரங்களுடன் தேனி வட்டாரத்தில் துணை வட்டாட்சியா், தொலைபேசி எண்: 04546-255133, போடி வட்டாரத்தில் துணை வட்டாட்சியா், தொலைபேசி எண்: 04546-28014, பெரியகுளம் வட்டாரத்தில் துணை வட்டாட்சியா், தொலைபேசி எண்: 04546-21215, ஆண்டிபட்டி வட்டாரத்தில் வட்டார வழங்கல் அலுவலா், செல்லிடப்பேசி எண்: 94450 00332, உத்தமபாளையம் வட்டாரத்தில் வட்டாட்சியா், தொலைபேசி எண்: 04554-265226 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கை முன்னிட்டு, புதிய குடும்ப அட்டைகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களை பெற்றுக் கொள்ளவாா். இந்த விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, குடும்ப அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர நாளையொட்டி இறுதிக்கட்ட ஒத்திகை - புகைப்படங்கள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் அலங்காரம்! பெரிய நாயகி அம்மனுக்கு மகா தீபாராதனை!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 14 - நேரலை!

நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


