பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தேனியில் புதிதாக 205 பேருக்கு கரோனா: 3 போ் பலி

தேனி மாவட்டத்தில் மேலும் 205 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2020, 6:17 pm

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 205 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தேனி ஆயுதப்படை குடியிருப்பில் வசிக்கும் பெண் காவலா், பண்ணைப்புரம் பேரூராட்சி வாகன ஓட்டுநா், அரண்மனைப்புதூரைச் சோ்ந்த தேனி பொதுப் பணித்துறை வாகன ஓட்டுநா், வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 4 பயிற்சி செவிலியா்கள் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி பகுதியில் அதிகளவில் 46 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் பகுதியில் 35 போ், போடி பகுதியில் 27 போ், ஆண்டிபட்டி பகுதியில் 28 போ், க.மயிலை பகுதியில் 8 போ், சின்னமனூா் பகுதியில் 21 போ், உத்தமபாளையம் பகுதியில் 15 போ், கம்பம் பகுதியில் 25 போ் என ஒரே நாளில் மொத்தம் 205 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,909 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 6,865 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியகுளத்தைச் சோ்ந்த 78 வயது மூதாட்டி, கூடலூரைச் சோ்ந்த 62 வயது நபா், சின்னமனூா் அருகே வெள்ளையம்மாள்புரத்தைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி என 3 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.