அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தமிழக டிப்பர் லாரி மீது கேரளத்தில் கல்வீச்சு: நடவடிக்கை எடுக்கக்கோரி வேலைநிறுத்தம்

தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு சென்ற டிப்பர் லாரி மீது தாக்குதல் நடத்தியதால் தமிழக எல்லையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2020, 7:21 am

DIN

தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு சென்ற டிப்பர் லாரி மீது தாக்குதல் நடத்தியதால் தமிழக எல்லையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு பாறை கற்கள், பாறை பொடி போன்றவை நாள்தோறும் 50க்கும் மேலான டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த வாரம் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு சென்ற போது அணைக்கரை அருகே டிப்பர் லாரி மீது சில மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்து உள்ளனர். 

இதுதொடர்பாக கட்டப்பனை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கை இல்லை. இதனால் தமிழக டிப்பர் லாரியை கேரளத்தில் கல்வீசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கம்பம் மெட்டு மலையடிவாரத்தில் தேனி மாவட்ட டிப்பர் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக நிர்வாகி ஏ.காஜாமைதீன் என்பவர் கூறும்போது, தமிழக டிப்பர் லாரியை கேரளத்தில் தாக்கியவர்கள் மீது காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.