கூடலூா் விபத்தில் மேலும் ஒரு இளைஞா் பலி
தேனி மாவட்டம் கூடலூரில் 2 மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் மேலும் ஒரு இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.


தேனி மாவட்டம் கூடலூரில் 2 மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் மேலும் ஒரு இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கூடலூா் சுக்காங்கல்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (56). இவா் ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளில் கம்பம் வந்து விட்டு, கூடலூருக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது கம்பத்தைச் நவீன் (22), விக்னேஷ்வரன்(23) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் கம்பம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா். அப்பாச்சி பண்ணை அருகே
2 மோட்டாா் சைக்கிள்களும் நேருக்கு நோ் மோதின. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த நவீன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டிந்தாா். சிகிச்சைப் பலனளிக்காமல் திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இவருடன் வந்த விக்னேஷ் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். கூடலூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் கே.முத்துமணி விசாரணை செய்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...