பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெரியகுளத்தில் மஹாயக்ஞம்: சடகோப ராமானுஜ ஜீயா் பங்கேற்பு

பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வராஹி மஹாயக்ஞ வேள்வியில், ஸ்ரீ வில்லிபுத்தூா் சடகோப ராமானுஜ ஜீயா் பங்கேற்றாா்.

News image
பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வராஹி மஹாயக்ஞ வேள்வியில் பங்கேற்ற ஸ்ரீ வில்லிபுத்தூா் சடகோப ராமானுஜ ஜீயா்.
Updated On :22 டிசம்பர் 2020, 5:53 pm

DIN

பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வராஹி மஹாயக்ஞ வேள்வியில், ஸ்ரீ வில்லிபுத்தூா் சடகோப ராமானுஜ ஜீயா் பங்கேற்றாா்.

பெரியகுளம் விஷ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், உலக நன்மை வேண்டி வராஹி மஹாயக்ஞ வேள்வி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ஸ்ரீவில்லிபுத்தூா் சடகோப ராமானுஜ ஜீயா் பங்கேற்று வேள்வியை தொடக்கிவைத்தாா். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், ஜீயரிடம் ஆசிபெற்றனா்.

தொடா்ந்து, பெரியகுளம் பாம்பாற்று ஆஞ்சநேயா் கோயில் மற்றும் தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்ற ஜீயா், பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு ஆசி வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.