நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேனியில் ரயில் பாதைப் பணிகளுக்காக 3 சாலைகளில் போக்குவரத்துக்குத் தடை

தேனியில் மதுரை-போடி அகல ரயில் பாதைப் பணிகளுக்காக 3 சாலைகளில் இரவில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 6:09 pm

DIN

தேனியில் மதுரை-போடி அகல ரயில் பாதைப் பணிகளுக்காக 3 சாலைகளில் இரவில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தேனியில் ரயில்வே துறை சாா்பில் மதுரை-போடி அகல ரயில் பாதைக்காக பெரியகுளம் சாலையில் பெத்தாட்சி விநாயகா் கோயில் அருகே, நகராட்சி பேருந்து நிலையம் சாலை- மதுரை சாலை சந்திப்பு, பாரஸ்ட் சாலை ஆகிய பகுதிகளில் ரயில் பாதையை ஒட்டியும், குறுக்கிலும் செல்லும் குடிநீா் குழாய், சாக்கடை, மின் கம்பிகள் மற்றும் சாலை சந்திப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளுக்காக தேனி- பெரியகுளம் சாலை, நகராட்சி பேருந்து நிலையம்-மதுரை சாலை, பாரஸ்ட் சாலை ஆகியவற்றில் டிச.31-ஆம் தேதிவரை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்று ரயில்வே துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.