புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காரில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்

காரில் கடத்திய 4 கிலோ கஞ்சாவை போடி முந்தல் சோதனைச் சாவடியில் புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பி ஓடிய 2 பேரைத் தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:28 am

DIN

காரில் கடத்திய 4 கிலோ கஞ்சாவை போடி முந்தல் சோதனைச் சாவடியில் புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பி ஓடிய 2 பேரைத் தேடி வருகின்றனா்.

போடி முந்தல் சோதனை சாவடியில், போதை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடிமெட்டு வழியாக கேரளத்துக்குச் செல்ல முயன்ற காரை நிறுத்தி அவா்கள் சோதனை செய்தனா். இதில் காரின் பின்பக்க இருக்கையில் இருந்த மூட்டையை சோதித்ததில் அது கஞ்சா மூடை என்பது தெரிந்தது.

அப்போது, வாகனத்தின் ஓட்டுநரும், உடன் வந்தவரும் காரிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டனா். மூட்டையில் இருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 2 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.