தேனி மாவட்டம், உத்தமபாளையம் சின்னமனூர் என சுற்றுவட்டாரத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் இரண்டாவது பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து மருத்துவமனை, மருந்துக்கடைகள் மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற வணிக நோக்கு கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக இயங்கும் இறைச்சி மீன் கடைகளும் முக்கியமாக பெட்ரோல் நிரப்பும் நிலையம், உணவகங்கள் என பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டன. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்களும் வெளியிடங்களுக்கு வருவதை குறைத்து குரன் ஆர் நோய்தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
உத்தமபாளையம், சின்னமனூர் பகுதி பிரதான சாலைகளில் போலீசார் வாகன சோதனை மேற்கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









