தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

போடி அருகே திறந்தவெளி கிணறு மூடப்படுமா?

போடி அருகே  குழந்தைகள் அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள திறந்தவெளி கிணற்றை மூடவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News image
Updated On :14 ஜூலை 2020, 9:06 am

DIN

போடி அருகே  குழந்தைகள் அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள திறந்தவெளி கிணற்றை மூடவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வினோபாஜி காலனி 2 ஆவது தெருவில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். தற்போது கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அங்கன்வாடி மையம் மூடப்பட்டாலும், உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையம் அருகே தனியாருக்கு சொந்தான திறந்தவெளி கிணறு உள்ளது. 

இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் குப்பைகள் கொட்டும் இடமாக உள்ளது. குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதாரக் கேடான நிலை உள்ளது. மேலும் கிணற்றைச் சுற்றி சுற்றுச் சுவர் இல்லாமல் திறந்தவெளி கிணறாக உள்ளது. இதனால் கிணற்றில் குழந்தைகள் விழுந்து ஆபத்து ஏற்படுத்தும் சூழலும் உள்ளது. மேலும் கிணற்றை சுற்றி குடியிருப்பு வீடுகளும் உள்ளன. 

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அங்கன்வாடி மையம் அருகே உள்ள கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.