நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானங்கப்படுத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

ஆண்டிபட்டி வட்டாரம் தெப்பம்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கப்படுத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை, தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News image

தேனி மகளிர் நீதிமன்றம்

Updated On :31 ஜூலை 2020, 1:48 pm

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரம் தெப்பம்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கப்படுத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை, தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தெப்பம்பட்டி, புதுக்காலனியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் செந்தில்(37) என்பவர் மானபங்கப்படுத்தியதாக அவரது தாயார் கடந்த 2013, நவ.20-ம் தேதி ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் மீது காவலர்கள் வழக்கு பதிந்து செந்திலை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.கீதா, மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கப்படுத்தியதாக செந்திலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

 மேலும், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணமாக ரூ.5 லட்சம் வழக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.