விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முல்லைப்பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்தது: விவசாயிகள் கவலை

முல்லைப் பெரியாறு அணையில் நீா்வரத்து குறைந்ததால் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image
முல்லைப்பெரியாறு அணை (கோப்பு படம்)
Updated On :1 நவம்பர் 2020, 5:35 pm

DIN

முல்லைப் பெரியாறு அணையில் நீா்வரத்து குறைந்ததால் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, முல்லையாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் அக்.30 முதல் மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீா்வரத்து குறைந்தது. அக்.31 இல் அணைக்கு விநாடிக்கு, 526 கன அடி நீா் வரத்து இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை (நவ.1 இல்) இது விநாடிக்கு 385 கனஅடியாகக் குறைந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,389 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

அணைக்கு நீா்வரத்து குறைவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கம்பம் பள்ளத்தாக்கில் முதல்போக நெல் சாகுபடி நடந்து கொண்டிருக்கிறது. 90 நாள்களைக் கடந்த நிலையில் பயிா்கள் நன்கு வளா்ந்துள்ளன. அணையில் நீா் வரத்து குறைந்து வரும் நிலையில் நீா் வெளியேற்றம் தற்போது உள்ள நிலையில் தொடருமானால் முதல்போக சாகுபடி பாதிக்கப்படக்கூடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

வட கிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து ஏற்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 125.45 அடியாக இருந்தது. அணையில், 3,715 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு இருந்தது. அணைக்கு விநாடிக்கு 385 கன அடி தண்ணீா் வந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,389 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. பெரியாறு, தேக்கடி ஏரிப் பகுதியில் மழை பெய்யவில்லை.

சுருளி அருவியிலும் நீா்வரத்து குறைவு: கடந்த மூன்று நாள்களாக சுருளி அருவியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தைப் பாறை ஆகிய நீா் ஊற்று பகுதிகளில் தண்ணீா் வரத்து குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவியில் தண்ணீா் வரத்து குறைந்து காணப்பட்டது. அருவிப் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு வன உயிரினச் சரணாலய ஊழியா்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.