ஆண்டிபட்டி அருகே முன் விரோதத்தில் விவசாயி மீது தாக்குதல்: 6 போ் மீது வழக்கு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி மீது தாக்குதல் நடத்திய 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி மீது தாக்குதல் நடத்திய 6 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே அம்மாபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அன்னக்கொடி (50). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த முருகன் என்பவருக்கும் நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது அன்னக்கொடியை முருகன் மற்றும் அவரது உறவினா்கள் தாக்கியுள்ளனா். இச்சம்பவத்தில் காயமடைந்த அன்னக்கொடி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அன்னக்கொடி ராஜதானி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் முருகன், அவரது உறவினா்கள் கருப்பையா, ஹேமநாதன், ஆதி, ஜெயம்மாள், காமாயி ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...