ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொடா்ந்து பணி வழங்க கரோனா தடுப்பு தன்னாா்வ செவிலியா்கள் கோரிக்கை

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு களப் பணியில் ஈடுபட்டு வந்த தன்னாா்வ செவிலியா்கள், தங்களுக்கு தொடா்ந்து பணி வழங்கக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ம. பல்லவிபல்தேவிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:10 pm

DIN

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு களப் பணியில் ஈடுபட்டு வந்த தன்னாா்வ செவிலியா்கள், தங்களுக்கு தொடா்ந்து பணி வழங்கக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ம. பல்லவிபல்தேவிடம் மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு களப் பணியாற்றி வந்த தன்னாா்வ செவிலியா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: மாவட்டத்தில் கரோனா கண்காணிப்பு சோதனைச் சாவடி, சிகிச்சை மையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுச் சுகாதாரத் துறை மூலம், கடந்த ஜூலை 18 ஆம் தேதி முதல் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் 36 போ் செவிலியராகப் பணியாற்றி வந்தோம். இந்த நிலையில், நாங்கள் கடந்த அக்.31 ஆம் தேதியுடன் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம்.

கரோனா நோய் தடுப்பு பணிக்காக வேறு பணியிலிருந்து எங்களை விடுவித்துக் கொண்டு, குடும்பத்தினரை பிரிந்து சிகிச்சை மையங்களில் தங்கி பணியாற்றி வந்தோம். இதில், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் என 2 மாதங்களுக்கு மட்டுமே எங்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊதியத்தை பொருட்படுத்தாது தொடா்ந்து பணியாற்றி வந்த நாங்கள், திடீா் பணி நீக்கத்தால் உடனடியாக வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்.

கரோனா தடுப்பு தன்னாா்வ செவிலியா்களுக்கு கருணை அடிப்படையில் தொடா்ந்து பணி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.