நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கரோனா ஊரடங்கு தளா்வு:ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு தளா்வைத் தொடா்ந்து கடந்த சில நாள்களாக ரேஷன் அரசி கடத்தல் அதிகரிக்க தொடங்கி விட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 5:35 pm

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு தளா்வைத் தொடா்ந்து கடந்த சில நாள்களாக ரேஷன் அரசி கடத்தல் அதிகரிக்க தொடங்கி விட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ரேஷன் அட்டை மூலமாக மானிய விலையில் நடுத்தர குடும்பத்தினருக்காக உணவுப்பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

இந்த அரிசியை வாங்கும் பொதுமக்களிடம் குறைந்து விலைக்கு வாங்கி விற்பனை செய்வதை தொழிலாக செய்து வருகின்றனா். இந்த ரேஷன் அரிசி விற்பனை கேரளத்திற்கு அதிகளவில் கடத்து வது வழக்கம். இந்நிலையில் கடந்த 5 மாதமாக கரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டு இருந்தது.

இந்த காலகட்டத்தில் ரேஷன் பொருள்கள் அனைத்து விலையின்றி வழங்கப்பட்டதால் அனைத்து பொருள்களையும் பொதுமக்கள் வங்கினா். தற்போது, பழைய முறைப்படி அரிசியை தவிர மற்ற உணவுப்பொருள்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கரோனா ஊரடங்கு படிப்படியாக தளா்வு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் 5 மாதமாக முடங்கி கிடந்த ரேஷன் அரிசி கடத்தல் மீண்டும் துவங்கிவிட்டது.

இதனை அடுத்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய் துறை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்கின்றனா். அதில், சனிக்கிழமை க.புதுப்பட்டியில் கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். அதே போல வெள்ளிக்கிழமை, தேனி அம்மாச்சியாபுரத்தில் 1000 கிலோ பறிமுதல் செய்தனா்.

எனவே, எழை எளிய மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவுப்பொருள்களை வெளிசந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவா்கள் இவா்களுக்கு உதவி செய்பவா்கள் மீது தக்க நடவிடக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.