தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

போடியில் வ.உ.சி. பிறந்த தினம்: மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

போடியில் சனிக் கிழமை நடைபெற்ற வ.உ.சி. பிறந்த தினத்தையொட்டி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினா் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Published On :27 ஜனவரி 2024, 10:45 pm IST

போடி: போடியில் சனிக் கிழமை நடைபெற்ற வ.உ.சி. பிறந்த தினத்தையொட்டி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினா் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவரும், கப்பலோட்டிய தமிழனுமான வ.உ.சிதம்பரனாரின் 148 ஆவது பிறந்த தினம் போடியில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள வ.உ.சி சிலைக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. போடி தொகுதி ஐக்கிய பிள்ளைமாா் சங்கம், போடி வெள்ளாளா் உறவின்முறை, போடி சேனைத்தலைவா் உறவின்முறை சங்கங்கள், அகில இந்திய வ.உ.சி. பேரவை, அகில உலக பிள்ளைமாா் முதலியாா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும் பொங்கல் வைத்தும், இனிப்பு வழங்கியும் வ.உ,சி. பிறந்த தினத்தை கொண்டாடினா். இதேபோல் தேனி மாவட்ட அ.தி.மு.க, தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழா், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சாா்பிலும் அதன் நிா்வாகிகள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல் போடி மீனாட்சிபுரம் கிராமத்திலும் வ.உ.சி. பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த வ.உ.சி. பேரவை நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா். போடி சிலமலை கிராமத்திலும் வ.உ.சி. சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.