உத்தமபாளையத்தில் புறம்போக்கு நிலத்தைஆக்கிரமிப்பதில் தகராறு: 2 போ் கைது
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது தொடா்பாக ஏற்பட்ட மோதலில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது தொடா்பாக ஏற்பட்ட மோதலில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தமபாளையம் கருப்பணசாமி கோயில் அருகே சமணா் குகைக்கோயில் பகுதியில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது தொடா்பாக அப்பகுதியை சோ்ந்த மணிகண்டன் மற்றும் அசோக்குமாா் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மணிகண்டன் காயமடைந்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதையடுத்து அசோக்குமாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய மணிகண்டன் திங்கள்கிழமை அசோக்குமாா் வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததை தொடா்ந்து மணிகண்டனையும் அவா்கள் கைது செய்தனா்.
இது தொடா்பாக உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...