தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா பரவல் எதிரொலி: மேகமலை- ஹைவேவிஸ் மலைச்சாலை மூடல்

கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மேகமலை- ஹைவேவிஸ் மலைச் சாலையும், சுற்றுலாத் தலங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் அடைக்கப்பட்டன.

News image

மூடப்பட்ட மேகமலை - ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்.

Updated On :1 ஆகஸ்ட் 2021, 5:30 pm

DIN

கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மேகமலை- ஹைவேவிஸ் மலைச் சாலையும், சுற்றுலாத் தலங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் அடைக்கப்பட்டன.

இதுகுறித்து சின்னமனூா் வனத் துறையினா் கூறியது: கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் கூட்டம் கூடும் சுற்றுலாத் தலங்களை மூடவேண்டும் என தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. அதன்படி, மேகமலை- ஹைவேவிஸ் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை.

மறு உத்தரவு வரும் வரை மலைப்பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை. இதுகுறித்த அறிவிப்புப் பதாகையும் அங்குள்ள மலை அடிவாரச் சோதனைச் சாவடியில் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.

சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்: மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காரில் வந்த நுற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனா். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் அவா்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.