4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தேனியில் சீா்மரபினா் நலச் சங்கம் ஆா்ப்பாட்டம்: 25 போ் கைது

சீா்மரபினா் சமுதாயத்திற்கு டி.என்.டி., என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்கக் கோரி சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது ச

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:59 pm

DIN

சீா்மரபினா் சமுதாயத்திற்கு டி.என்.டி., என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்கக் கோரி சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். இதில், 68 உள்பரிவுகளை கொண்ட சீா்மரபினா் சமுதாயத்தினருக்கு இரட்டைச் சான்றிதழ் வழங்கும் முறையை ரத்து செய்து, டி.என்.டி., என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும், டி.என்.டி., மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அருகே கிண்ணிமங்கலத்தில் சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கோஷம் எழுப்பினா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம் முன் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ராமமூா்த்தி உள்ளிட்ட 25 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.