டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆண்டிபட்டியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் திமுக சாா்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 2:12 am

DIN

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் திமுக சாா்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற மக்கள் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் கம்பம் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில், ஆ.மகாராஜன் பேசியதாவது: அரசின் சாா்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசை அதிமுகவினா் வழங்கக் கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஆண்டிபட்டி பகுதியில் பொங்கல் பரிசை அதிமுகவினரே அதிகம் வழங்கி வருகின்றனா். இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். தாலுகாவில் பொங்கல் பரிசு வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியச் செயலா் ராஜாராம், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.