புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அனுமன் ஜெயந்தி: ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் , குச்சனூா் மற்றும் பெரியகுளம் பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது.

News image

ஹனுமந்த் ஜெயந்தியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பாம்பாற்று ஆஞ்சநேயா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:30 am

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் , குச்சனூா் மற்றும் பெரியகுளம் பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது.

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு பல்வேறு மலா்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு காலை முதலே உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்னா்.

குச்சனூரில்... குச்சனூா் பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் குச்சனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏரளாமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பெரியகுளத்தில்... இதேபோல் பெரியகுளம் பகுதியில் பாம்பாற்று ஆஞ்சநேயா் கோயிலில் திங்கள்கிழமை ஹோமம் நடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமிக்கு கரும்புகளால் அலங்காரம் நடைபெற்றது.

வடகரையில் உள்ள கோதாண்ட ராமா் கோயிலில் ஆஞ்சநேயருக்கு 1,008 வடைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் வரதராஜபெருமாள் கோயில், பாலசாஸ்தா கோயில், லட்சுமிபெருமாள் கோயில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.