சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

தேனி, திண்டுக்கல்லில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதன்கிழமை புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:10 pm

DIN

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதன்கிழமை புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,986 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரில், ஒரே நாளில் 12 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,733 ஆக அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்றிலிருந்து குணமடைந்த 13 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் மொத்தம் 11,086 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,815 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 73 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.