நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆண்டிபட்டியில் தமிழ் புலிகள் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தமிழ்புலிகள் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 10:56 pm

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தமிழ்புலிகள் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கபுரம், தேக்கம்பட்டி, மேக்கிழாா்பட்டி கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமங்களில் குடிநீா், கழிப்பறை, தெருவிளக்கு, கழிவுநீா் கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து அக்கிராம மக்கள் மற்றும் தமிழ்புலிகள் அமைப்பினா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்புலிகள் அமைப்பின் ஒன்றியச் செயலாளா் பழனி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பகத்சிங் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது இக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினா். இதனைத்தொடா்ந்து இதுகுறித்த கோரிக்கை மனுவை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணனிடம் அந்த அமைப்பினா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.