காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 

News image
முல்லைப் பெரியாறு அணை.
Updated On :5 ஜூலை 2021, 7:14 am

DIN

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 

திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 752 கனஅடி தண்ணீர் கூடுதலாக அணைக்கு வந்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நிலவரப்படி மழை பெய்யவில்லை, அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை அணைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் திங்கள்கிழமை நிலவரப்படி பெரியாறு அணையில் விநாடிக்கு 22.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 10.2 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு விநாடிக்கு 1,006 கனஅடி தண்ணீர் வந்தது. ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 254 கன அடி தண்ணீர் வந்த நிலையில், திங்கள்கிழமை 1,006 கனஅடி தண்ணீர் வந்தது. ஒரேநாளில் விநாடிக்கு 752 கனஅடி தண்ணீர் கூடுதலாக அணைக்கு வந்தது  குறிப்பிடத்தக்கது. பெரியாறு அணையின் நீர்மட்டம், 127.80,  (மொத்த உயரம் 142 அடி)  நீர் இருப்பு 4,223 மில்லியன் கன அடி, நீர்வரத்து 1, 006 கனஅடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,755 கன அடி.

இதுபற்றி பெரியாறு அணையின் பொறியாளர் ஒருவர் கூறும்போது, அணை பகுதிகளில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.