விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெரியகுளம் மருந்து கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

பெரியகுளத்தில் மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ 2 இலட்சம் மற்றும் பொருள்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

News image
பெரியகுளம் மருந்து கடை.
Updated On :26 ஜூலை 2021, 5:38 am

DIN

பெரியகுளத்தில் மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ 2 இலட்சம் மற்றும் பொருள்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம், சுதந்திர வீதியில் மோகன் என்பவர் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இன்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்த போது பெட்டியில் வைத்திருந்த ரூ 2 இலட்சம் மற்றும் பெருட்களை காணவில்லையாம்.

இச்சம்பவம் குறித்து தென்கரை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.