நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையில்லை: பெரியாறு அணை நீர்வரத்து குறைந்தது
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்குள் நீர்வரத்து குறைந்துள்ளது.


முல்லைப் பெரியாறு அணை.யின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்குள் நீர்வரத்து குறைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் அணைக்குள் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்டது. ஜூன் 18.ல் விநாடிக்கு, 5,482 கனஅடி தண்ணீர் வந்தது, மழை அளவு குறைந்ததால் ஜூன் 20.ல் 1,725 கன அடியாகவும், ஜூன் 21.ல் 1,380 கனஅடி தண்ணீர் அணைக்குள் வருவது படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் தற்போது மழை பெய்யவில்லை, இதனால் அணைக்குள் நீர்வரத்து குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணைக்குள் விநாடிக்கு,783 கன அடி தண்ணீர் வந்தது, சனிக்கிழமை நிலவரப்படி அணைக்குள் விநாடிக்கு, 646 கனஅடி தண்ணீர் வந்தது. சனிக்கிழமை அணையின் நிலவரம், நீர்மட்டம் 132.35 (மொத்த உயரம் 142 அடி).
அணைக்குள் நீர் இருப்பு, 5,247 மில்லியன் கனஅடி, அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு, 646 கனஅடியாக உள்ளது. தமிழகப் பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 1,767 கனஅடியாக இருந்தது. மின் உற்பத்தி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு, 1867 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், 4 மின்னாக்கிகள் மூலமாக ( தலா 42 மெகாவாட்) அதன் முழு கொள்ளளவான, 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி, கடந்த ஜூன் 18 முதல் உற்பத்தி தொடங்கி தற்போது வரை நீடித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...