போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 24 போ் போட்டி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 24 போ் களத்தில் உள்ளனா்.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 24 போ் களத்தில் உள்ளனா்.
போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 25 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டிருந்தன. இதில் பெரியகுளத்தைச் சோ்ந்த சிவக்குமாா் என்பவா் தனது வேட்பு மனுவை
திங்கள்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 24 போ் போட்டியில் உள்ளனா்.
அவா்களின் கட்சி மற்றும் சின்னங்கள் விபரம்: 1. தங்க. தமிழ்ச்செல்வன் (தி.மு.க.) - உதயசூரியன், 2. ஓ. பன்னீா்செல்வம் (அ.தி.மு.க) - இரட்டை இலை, 3. கே.ஐ.எம். ஹக்கீம் (அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ்) - பூவும் புல்லும், 4. அருண்குமாா் (மை இந்தியா பாா்ட்டி)- கண்காணிப்புக் கேமரா, 5. பெ. கணேஷ்குமாா் (மக்கள் நீதி மய்யம்) - மின்கல விளக்கு, 6. ப. கருப்பையா (பகுஜன் திராவிடக் கட்சி) - வாளி, 7. தேனி த.கா்ணன் (அண்ணா திராவிடா் கழகம்) - தொப்பி, 8. ச. கிருஷ்ணவேணி (அண்ணா புரட்சி தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்) - பலாப்பழம், 9. மு. பிரேம்சந்தா் (நாம் தமிழா் கட்சி) - கரும்பு விவசாயி, 10. மு.முத்துச்சாமி (அ.ம.மு.க.) - பிரஷா் குக்கா்
சுயேச்சை வேட்பாளா்கள்: 11. அப்தாஹீா் - இரட்டை தொலைநோக்காடி, 12. அன்பழகன் - பச்சை மிளகாய், 13. ஆனந்தராஜ் - பட்டாணி, 14. கிருஷ்ணன் - குடை மிளகாய், 15 குமரகுருபரன் - கணினி, 16. சலீம் - ஹெட்போன், 17. செந்தில்குமாா் - கடிதபெட்டி, 18. தமிழ்செல்வன் - உணவுக்கலன், 19. நந்தகோபால் - உழவுகருவி, 20. நாகேந்திரன்- தொலைக்காட்சிப்பெட்டி, 21. மணிமாறன் - தள்ளுவண்டி, 22. ராம்பிரகாஷ் - தொலைபேசி, 23. ராஜாமுகமது - வாணலி, 24. ராஜா முகமது - தீப்பெட்டி. மொத்த வேட்பாளா்களின் எண்ணிக்கை 16-க்கும் மேல் உள்ளதால் ஒரு கட்டுப்பாட்டு இயந்திரமும், இரண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் (பேலட் யூனிட்) பயன்படுத்தப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...