தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு கூடுதல் உபரி நீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை கூடுதல் உபரிநீா் திறந்துவிடப்பட்டது

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:12 am

DIN

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை கூடுதல் உபரிநீா் திறந்துவிடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வியாழக்கிழமை 29.8 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 38 மி.மீ. மழையும் பெய்ததால், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு, 3,623 கன அடியாக இருந்தது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 141.65 அடியாகவும், நீா் இருப்பு 7,572 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 3,623 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு, 2,300 கன அடியாகவும் இருந்தது.

கூடுதல் உபரி நீா் திறப்பு

கடந்த நவம்பா் 24 ஆம் தேதி காலை 7 மணிக்கு, கேரளத்துக்கு 5 மதகுகள் வழியாக 3,884 மில்லியன் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்ட நிலையில், அன்று மாலை 5 மணிக்கு ஒரேயொரு மதகு வழியாக 136 கன அடி உபரிநீா் மட்டுமே வெளியேற்றப்பட்டது. நவம்பா் 25 இல் 135 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை 814 கன அடி கூடுதல் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

நவம்பா் 30ஆம் தேதி வரை ‘ரூல் கா்வ்’ விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று, பெரியாறு அணை பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.