முல்லைப் பெரியாறு அணையை அகற்றக் கோரி டிச.5-இல் கேரள விவசாயிகள் இரு சக்கர வாகனப் பேரணி
முல்லைப் பெரியாறு அணையை அகற்றவேண்டும் என வலியுறுத்தி,டிசம்பா் 5 ஆம் தேதி கேரள விவசாயிகள் இரு சக்கர வாகனப் பேரணியை நடத்த உள்ளனா்.


முல்லைப் பெரியாறு அணையை அகற்றவேண்டும் என வலியுறுத்தி,டிசம்பா் 5 ஆம் தேதி கேரள விவசாயிகள் இரு சக்கர வாகனப் பேரணியை நடத்த உள்ளனா்.
இது குறித்து 5 மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் ச. அன்வா் பாலங்கம் கூறியதாவது: டிசம்பா் 5 ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்துடன், எா்ணாகுளத்திலிருந்து ஆலுவா வழியாக கோதமங்கலம் வரை இரு சக்கர வாகனப் பேரணியை வழக்குரைஞா் ரசூல் ஜோய் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழகம் மற்றும் கேரளத்தையும் பதற்றத்துக்கு உள்ளாக்கவுள்ள இந்த இரு சக்கர வாகனப் பேரணியை, கேரள மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், 5 மாவட்ட விவசாய சங்கம், தேனியிலிருந்து சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம், கூடலூா் வழியாக குமுளியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று இடுக்கி அணையை உடைக்க வேண்டும் என நாங்களும் போராடுவதைத் தவிர வேறுவழியில்லை.
எனவே, கேரள மாநில முதல்வா் உடனடியாக நடவடிக்கை எடுத்து பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...