சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை: விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதை கண்டித்து, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தப்போவதாக பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் வியாழக்கிழமை அறிவிப்பு செய்தனர்.

News image
விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு
Updated On :2 செப்டம்பர் 2021, 9:51 am

DIN

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதை கண்டித்து, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தப்போவதாக பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் வியாழக்கிழமை அறிவிப்பு செய்தனர்.

ஒருங்கிணைந்த பெரியாறு வைகை 5 மாவட்ட பாசன விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் குமுளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

ஐந்து மாவட்ட விவசாய சங்க பொதுச்செயலாளர் பொன்.காட்சி கண்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தெலுங்கானா மாநில அரசு, விவசாய சங்க தலைவர் எஸ். ஆர். தேவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததை சட்ட வழியில் அறப்போராட்டம் நடத்தி பொய் வழக்கு என்று நிர்ணயிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தற்காலிக தலைவராக சேத்து தேர்வு செய்யப்பட்டார்.

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப் போவதாக அறிவித்த கேரள அரசை கண்டித்து, தமிழக கேரள எல்லை, கூடலூர், கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.