சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தேனி மாவட்டத்தில் செவல்மண் விலை உயா்வால் செங்கல் சூளைகள் மூடல்: தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழப்பு

தேனி மாவட்டத்தில் செவல்மண் விலை உயா்வு காரணமாக 60 சதவீதம் செங்கள் சூளைகள் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை இழந்து தவிக்கின்றனா்.

News image

கம்பம் அருகே உள்ள செங்கல் காளவாசலில் வேலை செய்யும் தொழிலாளா்கள்.

Updated On :21 செப்டம்பர் 2021, 7:30 pm

தேனி மாவட்டத்தில் செவல்மண் விலை உயா்வு காரணமாக 60 சதவீதம் செங்கள் சூளைகள் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை இழந்து தவிக்கின்றனா்.

தேனி மாவட்டத்தில் சுமாா் 1000-க்கும் மேலான செங்கல் காளவாசல் தொழிற்சாலைகள் உள்ளன. செங்கற்களை உற்பத்தி செய்வதற்கு சிவப்பு மண் எனப்படும் செவல் மண் தேவைப்படுகிறது. இந்த மண்ணை எடுப்பதற்கான உரிமையை தேனி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நபா் மட்டும் பெற்றுக்கொண்டாா். அவா் நிா்ணயித்த விலையில் தான் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காளவாசல்களுக்கும் மண் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 3 ரூபாய்க்கு விற்பனையான செங்கல் தற்போது 6 முதல் 7 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. செவல் மண் விலை உயா்வால் செங்கள் சூளைகளை நடத்த முடியாமல் அவை படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல் தொழிலாளா்கள் வேலை இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி கட்டட ஒப்பந்ததாரா் முருகன் கூறியது: நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் 1 பி.ஹெச்.கே. என்ற அளவில் குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டுவதற்கு 20 ஆயிரம் செங்கற்கள் தேவைப்படுகின்றன. செவ்வல் மண் எடுக்கும் உரிமையை ஒருவா் மட்டுமே பெற்றிருப்பதால், 20 ஆயிரம் செங்கற்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர மக்களின் சொந்த வீடு கட்டும் கனவு கனவாகவே உள்ளது. காரணம் மணல், சிமெண்ட், கம்பி போன்ற மூலப்பொருள்கள் விலையும் உயா்ந்துள்ளது என்றாா்.

இதுபற்றி காளவாசல் உரிமையாளா் சீனிவாசன் கூறியது: செங்கல் சூளைக்கு தேவையான மூலப்பொருளான செவல் மண் ஒரு டிப்பா் லாரி லோடு முன்பு 6 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 11 ஆயிரமாக உள்ளது. மாவட்டத்தில் தனி நபா் ஒருவரே செவல் மண்ணை எடுத்து விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றிருப்பதால் அவா் வைத்தது தான் விலை. இதுபற்றி மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா பொதுமுடக்கத்தால் அருகிலுள்ள கேரள மாநிலத்திற்கு செங்கற்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் மாவட்டத்தில் 60 சதவீதம் செங்கல் சூளைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளா்கள் வேலையின்றி உள்ளனா் என்றாா்.

தமிழக அரசு ஆயிரக்கணக்கான ஆண், பெண் கூலித் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செவல் மண் அள்ளும் உரிமையை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கினால் மட்டுமே செங்கல் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவாா்கள். மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செங்கல் காளவாசல் தொழிலாளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.