மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.ஆர். பள்ளி

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவ மாணவியர் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

News image
பள்ளி தலைவர் ஆர்.ராஜாங்கம் மற்றும் நிர்வாகிகள் ரா.அசோக்குமார், ரா.ஜெகதீஸ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
Updated On :28 ஜனவரி 2024, 4:15 am

DIN

கம்பம்: மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவ மாணவியர் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

மாநில அளவிலான விரைவு ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டியை திருச்சி மாவட்ட ஸ்கேட்டிங் கோ கோ விளையாட்டு கழகம் நடத்தியது. இதில் பல மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

கம்பத்தில் உள்ள  ஆர்.ஆர். இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிகளுக்கிடையே அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை 6 வயது பிரிவில் எஸ்.யஷ்வந்த், 8 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் இ.ஜெகதீஸ்வரன், எஸ்.தக்சா ஆகியோர் முதலிடத்தையும்,  எஸ்.ஷிவானியா இரண்டாம் பரிசையும், வி.லோகஜித் மூன்றாவது பரிசையும், நான்காவது பரிசை கே.சஞ்சித் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

பள்ளி தலைவர் ஆர்.ராஜாங்கம் மற்றும் நிர்வாகிகள் ரா.அசோக்குமார், ரா.ஜெகதீஸ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.