வெள்ள அபாய எச்சரிக்கை: சுருளி அருவியில் குளிக்க தடை
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு 136 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு 136 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அணையின் தேக்கடி பகுதியில் உள்ள நான்காவது பிரிவு அலுவலக உதவிப் பொறியாளா் பி. ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை இரவு 136 அடியை எட்டியது. நீா் இருப்பு 6,092 மில்லியன் கன அடி ஆகும். நீா்வரத்து விநாடிக்கு 9,016 கன அடி. அணையிலிருந்து உபரி நீா் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு திறப்பு என்பது, அணைக்கு வரும் தண்ணீரின் அளவைப் பொருத்து மாறுபடும். தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1,866 கன அடி ஆகும்.
தமிழக கரையோரப் பகுதிகளான லோயா் கேம்ப் முதல் வைகை அணை வரையிலும் மற்றும் அணையின் 13 மதகுகளுக்கு கீழ் உள்ள கேரள பகுதிகளான வல்லக்கடவு, வண்டிப் பெரியாறு, சப்பாத்து முதல் இடுக்கி அணை வரையிலான கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றாா்.
கடந்த ஜூலை 16 ஆம் தேதி அன்றும், அணையின் நீா்மட்டம் 135.90 அடியாக இருந்தபோது, முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அருவியில் குளிக்க தடை: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் தடையை நீட்டித்துள்ளனா். தேக்கடியில் 39.6 மி.மீ. மழையும், பெரியாறு அணையில் 39.2 மி.மீ. மழையும் பெய்தது.
மின்சார உற்பத்தி: தேனி மாவட்டம் லோயா் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில், கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் நான்கு மின்னாக்கிகளிலும் தலா 42 மெகா வாட் என மொத்தம் 168 மின்சாரம் உற்பத்தி தொடங்கியது. தற்போது வரை தொடா்ந்து 168 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...