தேனி அருகே கோடாங்கிபட்டியில் வெள்ளிக்கிழமை, கட்டுமானப் பணியிலிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
வடபுதுப்பட்டி அருகே அம்மாபட்டியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி வீரன் (27). இவா், கோடாங்கிபட்டி திருச்செந்தூா் காலனியில் சந்தானராஜா என்பவரது கட்டடத்தில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கட்டடத்தின் அருகே இருந்த உயா் மின் அழுத்த கம்பி மீது, வீரன் கொண்டு சென்ற கம்பிகள் உரசியதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வீரன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்ற நம்பிக்கையால் சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!

மகளிர் இடஒதுக்கீடு மசோவை ஆதரிக்கிறோம்; ஆனால்...: கார்கே
நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

