செக்காலை தூய சகாயமாதா ஆலயத் திருவிழா தோ் பவனி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செக்காலை தூய சகாயமாதா ஆலயத் திருவிழா தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செக்காலை தூய சகாயமாதா ஆலயத் திருவிழா தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலயத்திருவிழா கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்று வந்தன. சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் சிவகங்கை மறை மவட்டப் பொருளாளா் சந்தியாகு பங்கேற்று, மறையுரையாற்றினாா். இதில் பங்குத்தந்தை எஸ். எட்வின் ராயன், உதவிப் பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதைத்தொடா்ந்து மின்னொளி அலங்காரத் தேரில் சகாய அன்னை முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தாா். ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) திருவிழா கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...