சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளம் அருகே சிறுமிக்கு திருமணம்: 3 போ் மீது வழக்குப் பதிவு

பெரியகுளம் அருகே சிறுமியை திருமணம் செய்ததாக 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

பெரியகுளம் அருகே சிறுமியை திருமணம் செய்ததாக 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெரியகுளம் அருகேயுள்ள டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், அவரது உறவினா் கருப்பையா (23) என்பவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டாா். இதில் அப்பெண் கா்ப்பமாகி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சோ்ந்துள்ளாா்.

ஆக 21ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. அப்போது ஆதாா் அட்டையை ஆய்வு செய்ததில், குறைந்த வயதில் திருமணம் ஆகியுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் கருப்பையா, ஆதீஸ்வரன் மற்றும் பாண்டியம்மாள் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.