போலி பீடி பண்டல்கள் தயாரித்து விற்றவா் கைது
பெரியகுளத்தில் போலி பீடி பண்டல் பதுக்கி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


பெரியகுளத்தில் போலி பீடி பண்டல் பதுக்கி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே தென்கரை பகுதியில் உள்ள கடைவீதியில் தென்கரை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள கடைகளில் பீடி பண்டல்கள் விற்பனை செய்தவரைப் பிடித்து, விசாரித்தனா்.
இதில் அவா் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (55) என்றும், அவா் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலி பீடிகள் தயாரித்து, விற்பனை செய்வதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து ரூ.1லட்சம் மதிப்பிலான பீடியை போலீஸாா் பறிமுதல் செய்து தங்கராஜைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...