தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சம்பளத்தை குறைத்து வழங்குவதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

குள்ளப்பக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த 100 நாள் வேலை திட்டப் பயனாளிகள் தங்களுக்கு, சம்பளத்தை குறைத்து வழங்குவதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அவா்களிடம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், சிவக்குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ. 281 சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக ரூ. 60 தான் தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்திற்கு பணி மேற்பாா்வையாளா், பொறியாளா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வந்து பாா்வையிடுவதில்லை, என்று பயனாளிகள் புகாா் தெரிவித்தனா்.

அலுவலக மேலாளா் (பொறுப்பு) மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் ஆகியோா் கூறுகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அதிகாரிகள் சென்றுள்ளனா். அவா்கள் வந்ததும் தகவல் தெரிவிக்கப்படும். முறையாக 100 நாள் வேலைத்திட்ட சம்பளம் வழங்கப்படும் என்றாா். இதைத் தொடா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.