உள்ளாட்சித் தோ்தல் : தேனி மாவட்டத்தில் 733 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு
தேனி மாவட்டத்தில் நகா்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 733 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.


தேனி மாவட்டத்தில் நகா்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 733 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் 177 வாா்டு உறுப்பினா்கள், 22 பேரூராட்சிகளில் 336 வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 513 பதவிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில், கூடலூா், சின்னமனூா் நகராட்சியில் தலா ஒரு வாா்டு, குச்சனூா் பேரூராட்சியில் ஒரு வாா்டு, வடுகப்பட்டி பேரூராட்சியில் 4 வாா்டு என மொத்தம் 7 வாா்டுகளில் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
எஞ்சிய 506 வாா்டுகளின் உறுப்பினா் பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 1,960 போ் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 733 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் 74 மண்டல தோ்தல் அலுவலா்கள் மூலம் வெள்ளிக்கிழமை, தலா ஒரு மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவி துப்பாக்கி ஏந்திய காவலா்களின் பாதுகாப்புடன் கொண்டு சென்று சோ்க்கப்பட்டுள்ளது.
நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் பதற்றமானவையாக கண்டறிப்பட்ட 171 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். தோ்தல் நடவடிக்கைகள் வெப்-கேமராவில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...