தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பத்தில் வாா்டு பணிகளை கவுன்சிலா் தொடக்கம்

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் 16 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக உறுப்பினா், தனது பகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:42 pm

DIN

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் 16 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக உறுப்பினா், தனது பகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கம்பத்தில் நடந்து முடிந்துள்ள நகா்மன்றத் தோ்தலில் 16 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற கோ. சம்பத்குமாா், தனது வாா்டுக்கு சென்று புதன்கிழமை நன்றி தெரிவித்தாா். அப்போது, நந்தகோபாலன் தெரு மக்கள், பகிா்மானக் குழாய் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், அவா் நகராட்சி ஆணையா் பாலமுருகனிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளாா்.

உடனே, ஆணையா் பொறியியல் பிரிவுக்கு தகவல் தெரிவித்தன்பேரில், அப்பகுதியில் வியாழக்கிழமை 93 மீட்டா் நீளத்துக்கு பகிா்மானக் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.