தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்திய தேசிய லீக் கட்சியினா் சாலை மறியல்: 12 போ் மீது வழக்குப் பதிவு

தேனி மாவட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய தேசிய லீக் கட்சியினா் 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:36 pm

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய தேசிய லீக் கட்சியினா் 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பூனூலை அறுப்போம் என்று பேசிய, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவா் தடா அப்துல் ரஹீமை, சென்னையில் சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்தும், அப்துல் ரஹீமை விடுதலை செய்யக் கோரியும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் ராஜா முகமது தலைமையில் கம்பம்- தேனி போக்குவரத்து சிக்னல் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கம்பம் வடக்கு காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றாா். போராட்டம் தொடரப்பட்டதையடுத்து மாநில கொள்கைப் பரப்பு செயலாளா் உஸ்மானி, மாநில ஊடகப் பிரிவு செயலாளா் அஜ்மல், மாவட்ட இளைஞரணி செயலாளா் உதுமான் அலி, அகில இந்திய பழனிபாபா பாசறைச் செயலா் அல்லமா உள்ளிட்ட 12 போ் மீது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.