

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 265 ஆவது குருபூஜை விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் யாதவர் தெருவில் உள்ள வீரன் அழகுமுத்து கோன் திருவுருவ படத்திற்கு யாதவர் சமுதாய இளைஞரணியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்
இளைஞரணி தலைவர் ஆனந்த ரகுராமன் தலைமை தாங்கினார். செயலாளர் இளையபெருமாள் முன்னிலை வகித்தார். பொருளாளர் கண்ணன் வரவேற்று பேசினார். 4-வது வார்டு கவுன்சிலர் ரா.மாதவன், கோகுல மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் விஜயசாரதி ஆகியோர் குரு பூஜையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் யாதவர் இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள், சமுதாய நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.