சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு  துணைக் குழு நாளை ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு  துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்துகின்றனர்.

News image
Updated On :18 ஜூலை 2022, 7:45 am

DIN

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு  துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்துகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையில் பருவமழை காலங்களில் அணையின் உறுதித்தன்மை, நீர் வரத்து, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் ஆய்வு நடத்துவர், அவர்களுக்கு துணையாக மத்திய கண்காணிப்பு துணைக் குழுவும் ஆய்வு நடத்தும். அதன்பேரில் கடந்த பிப்ரவரி மாதத்தில்  துணைக்குழுவினர் அணையில் ஆய்வு நடத்தினர், தற்போது செவ்வாய்க்கிழமை அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.

மத்திய நீர் வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், தமிழக தரப்பு பிரதிநிதிகளாக அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், உதவி செயற் பொறியாளர் எம்.குமார், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் ஆய்வு நடத்துகின்றனர். 

புறக்கணிப்பு செய்த தமிழக அதிகாரிகள்: கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினர், அதன் பின்னர் குமுளி 1 ஆம் மைலில் உள்ள அலுவலகத்தில் ஆய்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக தரப்பு பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தனர். 

புறக்கணிப்பு பற்றி அவர்கள் கூறியது, முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் செய்ய உச்சநீதிமன்றம், கடந்த 2006 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அணையில் பராமரிப்புப் பணிகள் செய்ய கட்டப்பனையில் உள்ள நீர்ப்பாசன பிரிவு மற்றும் பெரியாறு புலிகள் சரணாலய தேக்கடி ( கிழக்கு) , அலுவலகத்தினர் அனுமதி தர மறுத்தும், தளவாட பொருள்கள் கொண்டு செல்லவும் தடை செய்கின்றனர். 

அது பற்றி கடந்த கூட்டங்களில் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்கிறோம், இதுபற்றி தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்று கூறினர். இந்த நிகழ்வு கேரள மாநிலத்திலும், தமிழக பகுதி விவசாயிகள், மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.