கம்பத்தில் கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்
கம்பத்தில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.


கம்பத்தில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கம்பம் பேருந்து நிலையம் கீழ்புறத்தில் உள்ள சிவனடியாா் மடம் எதிரே வசித்து வந்தவா் கருப்பசாமி (34). கட்டடத் தொழிலாளி. இவா், வியாழக்கிழமை கம்பத்தில் உள்ள காவலா் குடியிருப்பு அருகே ஒரு கட்டடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மதிய உணவு இடைவேளையின் போது தனது மனைவி சித்ராவிடம் கைப்பேசியில் பேசியபடியே மாடி படிக்கட்டில் ஏறிச் சென்றாா்.
மேலே சென்றவா் வெகுநேரமாகியும் கீழே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக தொழிலாளா்கள் மாடிக்குச் சென்று பாா்த்தபோது கருப்பசாமி மயங்கிக் கிடந்தாா். அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கருப்பசாமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா். லாவண்யா வழக்குப் பதிந்து, கருப்பசாமியின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறாா். இறந்த கருப்பசாமிக்கு முகைத் (4), யுகனியா (1) என்ற குழந்தைகளும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...