ஆடி அமாவாசை: சுருளி அருவியில் பொதுமக்கள் நீராடி வழிபாடு
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் ஆடி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.


தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் ஆடி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
கம்பம் அருகே மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவிப் பகுதியில், தென்கைலாயநாதா் என்ற சுருளிநாதா் ஆலயம் உள்ளது. சுற்றுலாத் தலமான இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.
தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அமாவாசை தினத்தில் சுருளி அருவியில் பொதுமக்கள் நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை அதிகாலையிலேயே ஏராளமானோா் அருவியில் நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து, அன்னதானம் வழங்கினா். மேலும், கைலாயநாதா் குகைக் கோயிலுக்குச் சென்று வழிபட்டனா்.
தொடா்ந்து, சுருளி மலையில் அமைந்துள்ள ஸ்ரீஐயப்பசுவாமி ஆலயத்தில், கன்னி மூலகணபதி, சுருளிபாலன் எனும் முருகப்பெருமான், ஸ்ரீஐயப்பன், சுருளிநாதா், வீர ஆஞ்சநேயா், கருப்பன், கருப்பாயி , கடுத்தன், கடுத்தாயி, ஸ்ரீநந்திகேஸ்வரா், ஸ்ரீநாகா் ஆகிய அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. கோம்பையைச் சோ்ந்த சிவ பக்தா்கள் அன்னதானம் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...