கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குமுளியில் பலத்த மழை: நகரில் கடைகளுக்குள் புகுந்த வெள்ளம்

குமுளி பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால், நகரில் உள்ள கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

குமுளி பகுதியில் வியாழக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால், நகரில் உள்ள கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கடந்த சில நாள்களாக, தென்மேற்கு பருவமழை மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பெய்யவில்லை. இதனால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து இல்லாமல் நீா்மட்டம் குறைந்தும் காணப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில்18.0 மி.மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில் 65.0 மி.மீ. மழையும் பெய்தது.

தொடா்ந்து, வியாழக்கிழமை மாலை மீண்டும் கனமழை பெய்ததால், குமுளி கோட்டயம், கட்டப்பனை நெடுஞ்சாலை சந்திப்பு பகுதிகளில் மழை வெள்ளம் கடைகளுக்குள் புகுந்தது. மழை வெள்ளத்தோடு கழிவுநீரும் புகுந்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா். சாலையில் நிறுத்தப்பட்ட காா், இரு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இது குறித்து முல்லைப் பெரியாறு அணை பொறியாளா் ஒருவா் கூறுகையில், புதன்கிழமை இடுக்கி மாவட்டத்தில் பெய்த மழை வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதனால், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக இருநந்தது என்றாா்.

அணை நிலவரம்

வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 133.25 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), நீா் இருப்பு 5,458 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து காலையில் விநாடிக்கு 1,274 கனஅடியாகவும், மாலையில் 3,000 கன அடியாகவும் இருந்தது. தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1,800 கன அடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.